எதிர்காலத்தில் ஒரு சிகரெட் வீதம் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று(22) குறித்த அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும் , வௌ்ளை நிறத்திலான சிகரெட் பொதி அட்டைகளை அறிமுகப்படுத்துவதை விரைவுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
இதன் போது, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் நவீன் சொய்சாவினால் சிகரெட் கட்டுப்பாடு தொடர்பான 10 யோசனைகள் சுகாதார அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை , அத்தியாவசிய மருந்து வகைகள் 48ன் விலை குறைப்பு செயற்திட்டம் வெற்றியளி்த்துள்ளதாகவும் அதற்கு தமது சங்கம் ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.