ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் கைது

(FASTNEWS | COLOMBO) – வெலிமட – திமுதுகம பிரதேசத்திலிருந்து ஒரு தொகை தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து 51 தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளதோடு, தான் வட்டிக்குப் பணம் கொடுத்து வருவதாகவும், ஆகையால் வட்டியைப் பெற்றுச் செல்லும் நபர்களிடமிருந்து அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொள்வதாகப் ​பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் தெரிவித்தார்.