ஒரு தொகை போதைப் பொருட்களுடன் இரண்டு பேர் கைது…

புத்தளம், வான வீதி பிரதேசத்தில் ஒரு தொகை போதைப் பொருட்களுடன் 28 மற்றும் 20 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராமும் 500 மில்லிகிராம் ஹெரோயின், ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து போதைப் பொருள் கொண்டு வந்து புத்தளம் பிரதேசத்தில் விநியோகிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.