(FASTNEWS|COLOMBO) தெற்கு கடற்கரைப்பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் 9 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 100 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரும் கடற்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த நபரகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.