கொஞ்சம் அதிமாகவே குடித்து விட்டாள்..எப்படியும் அவள் வீட்டிற்கு செல்லும் போது அவளுடைய அப்பா அம்மா கண்டு பிடித்திருப்பார்கள். அவளை அடித்திருப்பார்கள் .அண்ணன் மார்கள் கண்டித்து இருப்பார்கள். அவளும் இனி அப்படி செய்ய மாட்டேன் என்று கூறி இருப்பாள். அன்றே அவள் திருந்தியும் இருப்பாள் .. அதை புகை படம் பிடித்து அப்படத்தை வாட்ஸ் அப் ஏற்றி .. முகநூலில் ஏற்றி… யு டியுப் ல் ஏற்றி … உலகமே அவளை பார்க்க செய்து .. இறுதியாக அவளை தூக்கிலும் ஏற்றி விடுங்கடா .. அவள் மறுநாள் எப்படி இந்த உலகத்தின் முன் விழிக்க முடியும் என்று யாரவது யோசித்து உண்டா ? இதை எல்லாம் பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரியுது . இங்க 90% சதவீதம் பேருக்கு அடுத்தவர் வீடு குளியலறையை அவர்கள் அனுமதி இல்லாமல் எட்டி பார்க்கிற எண்ணம் உள்ளூர இருக்கிறது என்பது தெரிகிறது. குடித்து விட்டு கிடப்பது உன் மகளாக இருந்தால் ..அவளை கூப்பிட்டு கண்டிப்பாயா ? அல்லது இதோ பார்த்து கொள்ளுங்க என் மகள் குடித்து விட்டு தெருவில் படுத்து கிடக்கிறாள் என்று அதை புகை படம் எடுத்து பதிவிடுவாயா ? ஒரு படத்தை பகிர்வதற்கு முன்பு சிந்தியுங்கள் மக்களே
ஒரு பள்ளி மாணவி காதல் தோல்வியில் மது குடித்து விட்டாள் ,