ஒரு பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா…

தானே சொந்தமாக பாடல் எழுதி, பாடி “Honestly” என்ற ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா.

நடிகை மற்றும் பின்னணி பாடகியான ஆண்ட்ரியாவின் ஆல்பம் சாங் கடந்த வாரம் வெளியானது. இந்த பாடலின் பெயர் (Honestly) “ஹானஸ்ட்லி”.

இந்த பாடலுக்கு ஆண்ட்ரியாவே பாடல் வரிகளை எழுதியும், பாடியும் மற்றும் நடித்துள்ளார். இசையமைப்பாளர் லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா (guitarist ) ஆகியோரின் பங்களிப்பு இப்பாடலில் உள்ளது.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் ஆனா பாடல்களும் பாடியுள்ளார்.

தற்போது ஆங்கில மொழியில் இவரது (Honestly) “ஹானஸ்ட்லி” பாடல் வீடியோ காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.