(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் இரசிகர்கள் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் கிரிக்கெட் போட்டி ஒரு புறம் இருக்க மறுபுறம் அவர்கள் மீது தாக்குதல் இடம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண சுமார் 35 ஆயிரம் பேர் சென்றிருந்தனர்.
ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக அனுமதிச் சீட்டுக்களை விற்பனை செய்ய இரண்டு கவுண்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
இதனால், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் பதற்றமான நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தாக்குதல் சம்பவமாக உருவெடுத்துள்ளது. அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் உத்தரவிற்கு அமைய, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் பிரகாரம் கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் இராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விற்பனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை பார்வையிடுவதற்கு சென்ற இரசிகர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டமைக்கு தான் கண்டனம் வெளியிடுவதாக அமைச்சர் டலஸ் அலஹபெரும கூறியுள்ளார்.