ஒரு போட்டியிலாவது சொதப்பினால் அணியில் இருந்து நான் நீக்கப்படுவேன்.. – மலிங்கவின் மனைவியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி அவசியம்…

தான் ஒரு போட்டியிலாவது பின்னடைவினை சந்தித்தால், தன்னை அணியில் இருந்து நீக்குவதாக தான் நன்றாக அறிந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதான பணிப்பாளர் நாயகம் எஷ்லி டி சில்வா’விற்கு திசர பெரேரா அனுப்பியுள்ள கடிதமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லசித் மாலிங்கவின் மனைவியும் தனது மனைவியும் சமூக வலைதளங்களில் ஊடாக தொடர்ச்சியாக முரணான கருத்துக்களை வெளியிட்டு வருவதனையும் இதற்கு முடிவு ஒன்று அவசியம் குறித்தும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண போட்டியானது கைக்கெட்டிய தூரத்தில் இடம்பெறவுள்ளதாகவும், அணியினை சீர்குலைக்க விரும்பவில்லை என்றும் குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.