ஒரு மாதத்தில் சுமார் 6,700 ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்டனர்…

மியான்மரில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்யா மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எப்) அமைப்பு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 400 பேரே கொல்லப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதியிலிருந்து செம்டம்பர் 24ம் திகதி வரை 9,000 ரோஹின்யா மக்கள் மியான்மரில் உயிரிழந்துள்ளதாக உதவிக்குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.

இவர்களில் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதில் 59% பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 15% பேர் எரிக்கப்பட்டதாகவும், 7% பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கண்ணி வெடிகளால் 2% பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும் எம்.எஸ்.எஃப் தெரிவித்துள்ளது.