ஒரு வருடத்தின் பின்பு கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபை இன்று(08) செவ்வாயன்று கூடவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஷாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கூட்டமைப்புக்கு புதிய செயலாளரை நியமிப்பது மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிறைவேற்று சபை கூட்டம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று இடம்பெறவுள்ள இந்த சந்திப்புக்காக கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும், ஷாந்த பண்டார மேலும் கூறியுள்ளார்.