கருவளையங்களை சரியான பராமரிப்புக்களின் மூலம் நிரந்தரமாக போக்க முடியும். அதுவும் நம் வீட்டில் உள்ள சில எளிமையான பொருட்களைக் கொண்டு எளிதில் நீக்கலாம். கருவளையங்களை இயற்கையாகவும், நிரந்தரமாகவும் போக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கற்றாழை:
நற்பதமான கற்றாழை இலையை வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கண்களுக்கு அடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுங்கள்.
மஞ்சள்:
ஒரு பௌலில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்ப வாரத்திற்கு 2-% முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துருவி, கண்களைச் சுற்றி வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
க்ரீன் டீ பை:
நீரில் க்ரீன் டீ பைகளைப் போட்டு, ஃப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த பைகளை கண்களின் மீது 15 நிமிடம் வைக்க வேண்டும். அதன் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்ய வேண்டும்.
தேன்:
தினமும் கண்களைச் சுற்றி தேனைத் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், மிக வேகமாக கருவளையங்கள் போய்விடும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாற்றினை பஞ்சுருண்டையில் நனைத்து கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் காலை மற்றும் இரவு என இரண்டு வேளை செய்து வர வேண்டும். முக்கியமாக இந்த செயலுக்குப் பின், மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.