ஒரே நாளில் 88 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் – ஆப்கான்

தாலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியத்தை ஒழித்துக்கட்ட ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து உள்ளூர் பொலிஸாரும் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் இருந்து இன்று காலை வரை இங்குள்ள நங்கர்ஹர், லக்மான், பர்வான், தக்ஹர், குண்டுஸ், ஃபர்யாப், சர்-இ-புல், பல்க், ஸாபுல், ஓருஸ்கன், மைடான் வர்டக், காஸ்னி, கோஸ்ட், பாகிட்யா மற்றும் ஹேமன்ட் மாகாணங்களில் கடந்த 24 மணி நேரமாக நடத்தப்பட்ட வேட்டையில் 88 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 16 தீவிரவாதிகள் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டதாகவும் காபுல் உள்துறை அமைச்சகம் இன்று(5) அறிவித்துள்ளது.

(riz)