ஒலிவாங்கி செயலிழந்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் – விஜித

நாடாளுமன்றில் ஒலிவாங்கி செயலிழந்தமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நேற்று(08) நாடாளுமன்றில் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதிக்கப்படவிருந்த போதிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவையின் குறித்த நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஒலி வாங்கிகள் செயலிழந்தமை தொடர்பில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு என்ன என கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

எமக்கு தெரிந்த காலத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றதில்லை. குறித்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

வேண்டுமென்றே தொழில்நுட்ப கோளாறு ஏற்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.