ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டொலர் நன்கொடையாக வழங்க நான் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அவுஸ்திரேலியாவில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடுமையான காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அந்நாட்டு நட்சத்திர கிரிக்கெட் வீரரான கிறிஸ் லின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் லின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பிக் பாஷ் லீக் போட்டியில் நான் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 250 டொலர் நன்கொடையாக அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், நாடெங்கிலும் உள்ள உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்ற போராடும் உண்மையான வீரர்களுக்கு பின்னால் பல்வேறு விளையாட்டு துறைகளில் இருந்து வீரர்கள் வருவது பெரும் சிறப்பு எனவும் தெரிவித்துள்ளார்.