(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஈரான் மஹ்ஷாஹர் விமான நிலையத்தில் ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்கிய பின்னர் ஓடுபாதையில் இருந்து வெளியேறி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் இடம்பெறும் போது விமானத்தில் 135 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தை தரையிரக்கம் செய்யும் போது குறித்த விமானத்தை விமானிக்கு கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை தெஹ்ரானில் இருந்து இஸ்தான்புல்லுக்கு சென்ற ஈரானிய விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தெஹ்ரான் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.