ஓமான் நாட்டிற்கு புதிய அரசர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | ஓமான்) – ஓமான் நாட்டின் புதிய அரசராக ஹைதம் பின் தாரிக் அல்-சைத் (Haitham bin Tariq al-Said) நியமிக்கப்பட்டுள்ளதாக ஓமான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஓமான் நாட்டின் அரசர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் தனது 79 ஆவது வயதில் காலமாகிய நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.