ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

(FASTNEWS|COLOMBO) – ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை நாளை மறுதினம்(28) நாரஹேன்பிட்டி ஷாலிக்கா மைதானத்துக்கு வருகைதருமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள், பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.