ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் ஆப்று மாடியிலிருந்து விழுந்து மரணம்..

ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சரத் ஆப்று அவரது கல்கிஸ்சை வீட்டின் மாடியிலிருந்து விழுந்து இறந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுபோவில மரண விசாரணை அதிகாரி  குறித்த இடத்திற்கு செல்லவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சரத் ஆப்று கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.