தேசிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் அரச பணியாளர்களுக்கு எவ்வித நன்மைகளும் இல்லை என்று ஜே.வி.பி மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது.
மேல்மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கே டி லால்காந்த இதனை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஊழியர் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதிகளை திறைசேரியில் இருந்து அகற்றி, இரண்டையும் ஒன்றாக்கி வேறு ஒரு நிறுவனத்திடம் கையளிக்கவுள்ளது
இதன் அடிப்படையில் அரச பணியாளர்களுக்காக ஓய்வூதியத்தில் பிரச்சினைகள் ஏற்படும் என்று அவர் அச்சம் வெளியிட்டார்
அத்துடன் தனியார் துறையினருக்கும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் பல பிரச்சினைகள் உள்ளன
இந்நிலையில் தேசிய தொழில்சங்க மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களாகிய தாம் ஓய்வூதியம் தொடர்பிலும் ஊழியர் நம்பிக்கை மற்றும் சேமலாப நிதியம் தொடர்பிலும் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக லால் காந்த மேலும் எச்சரித்துள்ளார்.