போதைப் பொருள் விற்பனையாளர் “ஓலுமரா: என்றழைக்கப்படும் சானுக்க மதுஷான் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ – சிறிகம்பல பிரதேசத்தில் நேற்று(09) ஓலு மரா போதை பொருள் விற்பனை செய்யும் போது அதனை பெற்றுக் கொள்ள வந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(10) மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.