கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அழைக்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்ற்ச்சாட்டுக்கு அவர் ஓழுக்காற்றுக் குழு முன்னிலையில் பதிலளிக்க முடியாது போயின், ஓழுக்காற்றுக் குழுவின் தீர்மானத்தின் படி அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்கப்படும். பின்னர், இவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்டு, அவ்விடத்துக்கு வேறு ஒருவர் கட்சியினால் நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் துமிந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீ ல.சு.க.யின் சகல தீர்மானங்களும் கட்சியின் சட்ட யாப்புக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டன. அச்சுறுத்தல், அவப்பெயர் சூட்டி கட்சியை பயமுறுத்தலாம் என யாராவது கருதுவதாயின் அது பகல் கனவேயாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.