ஓவியாவுடன் நெருக்கம் குறித்து ஆரவ் விளக்கம்… (photo)

ஆரவ் ஓவியா இருவரும் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர், நடிகை ஓவியா. தனது இயல்பான நடவடிக்கைகளால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளார்.

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தநிலையில் ஆரவ்-ஓவியா அவ்வப்போது சந்தித்துக்கொண்டனர். இதுகுறித்து கிசுகிசுக்களும் வெளியானது.

இந்நிலையில், ஆரவ்-ஓவியா இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.

அத்துடன் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சில தகவல்கள் பரவியது. அந்த புகைப்படம் குறித்து ஆரவ்விடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் பழையது என்றும், நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்ற போது எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை’ இவ்வாறு ஆரவ் தெரிவித்தார்.

ஆரவ் தற்போது சிலம்பாட்டம் பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். களவாணி 2 படத்தை முடித்த ஓவியா 90 எம்.எல். படத்தில் நடித்து வருகிறார்.

Image result for aarav oviya