கொழும்பு – ஹூனுபிடிய கங்காராம விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக இன்று(09) மாலை 5 மணி தொடக்கம் குறித்த வீதியில் வாகன போக்குவரத்தினை தவிர்த்து கொள்ளுமாறு காவற்துறையினர் பொதுமக்களை வேண்டியுள்ளனர்.
பெரஹரா ஸ்ரீமன் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பெரஹரா மாவத்தை, உத்தரானன்ந்த மாவத்தை, நவம் மாவத்தை ஊடாக பெரஹெரா விகாரையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், மாற்று வீதிகளில் பயணிக்குமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய மாற்று வீதிகள் தர்மபால மாவத்தை, யுனியன் பிரதேசம், அக்பர் மாவத்தை, காலி விதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.