கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கரின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகம்

அவுஸ்திரேலிய கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வந்துள்ளமை குறித்து அரசாங்கம் தகவல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைக்கையில்,

ஜேம்ஸ் பெக்கரை கொண்டு முதலீடுகளை மேற்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்ட போது அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அதனை ஆட்சேபித்தது.

எனினும் நேற்று முன்தினம் இலங்கைக்கு அவர் வந்துள்ளமை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.