மத்திய ஆசிய கண்டத்தில் உள்ள கஜகஸ்தான் நாட்டில் இன்று(18) திடீரென பேரூந்தில் தீபிடித்த விபத்தில் 52 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ககஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இரு சாரதிகள் உட்பட 57 பேருடன் சென்று கொண்டிருந்த குறித்த பேரூந்து திடீரென்று தீபிடித்து எரிந்துள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கஜகஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.