கஜமுத்துக்கள் 11 உடன் 04 பேர் கைது…

கண்டி – பல்லேகலே பிரதேசத்தில் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கஜமுத்துக்கள் 11 உடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று(09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்கள் பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 27,28,35 மற்றும் 40 வயதுடையவர்களென்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த சந்தேகநபர்கள் நால்வரையும் இன்று (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.