கஞ்சாவுடன் கைது

காத்தான்குடி நகரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட கஞ்சாவுடன் நபரொருவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றினடிப்படையில் இந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

இதன்போது மோட்டார் சைக்கிளின் கைப்பிடிக்குள் மறைத்துக் கொண்டுவரப்பட்ட 195 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்