கடத்தப்பட்டதாக கூறப்படும் பண்டாரகம, வர்த்தகர் பலாங்கொட பகுதியில் கைது (Update)

திருகோணமலை பகுதி வங்கி ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட பண்டாரகம, அடுளுகம பிரதேச வர்த்தகரை பலாங்கொட பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தகர் யாழ் பிரதேசத்தில் பொதுத் தொலைபேசி நிலையமொன்றுக்கு அருகில் வைத்து தமது நண்பர் ஒருவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்பினை பரிசீலித்தே குறித்த வர்த்தகரை பலாங்கொட பகுதியில் வைத்து கைது செய்ய முடிந்ததாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் கடன் தொல்லை காரணமாகவே தலைமறைவாக கடத்தல் நாடகமாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.