கடத்தல் விவகாரம் குறித்த வழக்கில் ஹிருணிகா நீதிமன்ற முன்னிலையில்..

தெமட்டகொட பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றஞ் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கு இன்று(21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் ஹிருணிக்கா பிரேமசந்திரவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.