கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகளினால் ஏற்பட்ட நட்டத்தையை ஈடுசெய்யவே, பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுகின்றது.
அதன் ஊடாக வருமானத்தை ஈட்டிக்கொண்டு கடன் சுமையை குறைக்க அரசாங்கம் முனைவதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம் (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பெயரிலும் கிராமங்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.