கடந்த அரசாங்கத்தின் செலவீனங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
சிறிகோத்த கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த செலவீன அறிக்கையின் ஊடாக கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன் தொடர்பான முழுமையான விபரங்களை தெரிந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.