கடந்த அரசு எல்லை நிர்ணய நடவடிக்கையினை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை – பைசர் முத்தபா

கடந்த அரசாங்கம் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுத்திருந்தால் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டி எந்தத் தேவை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து கருத்து வினவியபோது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;

“உள்ளூராட்சிமன்ற தேர்தல் வரைப்படத்தை மூடிமறைப்பதாக கண்காணிப்பாளர்கள் எம்மீது குற்றஞ் சாட்டுகின்றனர். கண்காணிப்பாளர்களின் புரிந்துணர்வின்மையே இதற்கான காரணம் ஆகும்.

அடுத்த தேர்தலை நடத்துவதற்காக நாம் ஏப்ரல் மாதம் வர்த்தமானியில் பிரசுரித்தோம். உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அவற்றின் பதவிகால ஆரம்பம் பற்றியும் அதில் குறிப்பிட்டோம்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக குறித்த திகதியில் இத்தேர்தலை நடத்த வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் சீர்த்திருத்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் பதவி காலத்தை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி என குறிப்பிட வேண்டி ஏற்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதற்கு முன்னர் தேர்தலை நடத்த முடியுமாக இருந்தால் பதவி காலத்தை நீடிப்பதில் எவ்வித தடையும் இருக்கவில்லை. உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய எவ்வித தேவையும் எனக்கு இல்லை.

பசில் ராஜபக்ஷவின் முன்னைய பாவங்களுக்காக நான் சிரமப்படுகின்றேன் எல்லை நிர்ணய நடவடிக்கைகளை அவர் முறையாக முன்னெடுத்திருந்தால் இத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருந்திருக்காது..” என தெரிவித்தார்.

 

(rizmira)