(FASTNEWS|COLOMBO) கடந்த ஐந்து மாத காலப் பகுதியில் நாடு முழுவதிலும் 17975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 26 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் அதிக நோயாளர்களில் பதிவாகியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை 3909 பேர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த 25 நாட்களுக்குள் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார்.
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வீடு, சூழல், பாடசாலை சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்குமாறும் பொது மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.