Update – லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை..

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலை தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்தின் போது, பிரசாரங்கள் நிமிர்த்தம் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா செலவில் சில் உடை கொள்வனவு செய்த மோசடி தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பே இன்று(07) வழங்கப்பட்டது.

இதன்படி, அவர்கள் இருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையுடன், தலா 20 லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருவரும் தலா 50 மில்லியன் ரூபா அடிப்படையில் அரசாங்கத்திற்கு நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Update : Thursday, September 7, 2017 12.40
——————————————————————

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்டி ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு இன்று(07) வழங்கப்படவுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பௌத்த பிக்குகளுக்கான சீல் சீருடை விநியோகத்தில் அரசாங்க நிதியை முறைக்கேடாக கையாண்டதாக தெரிவித்து, சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தொலைதொடர்பு ஆணைக்குழுவிற்கு உரிய 600 மில்லியன் ரூபாவை அவர்கள் முறைக்கேடாக பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று(07) கொழும்பு மேல் நீதிமன்றம் அதற்கான தீர்ப்பை வழங்கவுள்ளது.

 

(rizmira)