கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சா/த ப் பரீட்சையில் திருமலை சாஹிரா கல்லூரி 92 வீத பெறுபேற்றை பெற்று திருகோணமலை
கல்வி வலய பாடசாலைகளுள் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த வருடம் சிறந்த பெறுபேற்றை பெற்ற மேற்படி பாடசாலையானது இம்முறையும் திருமலையின் பல முன்னணிப் பாடசாலைகளையும் பின்தள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. இம்முறை வெளிவந்த பெறுபேறுகளின் அடிப்படையில் தி/சாஹிரா கல்லூரி 92 வீதம், தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 89.85 வீதம் தி/கோணேஸ்வரா இந்துக்கல்லூரி (தேசிய பாடசாலை ) 77.07 வீதம் தி/விவேகானந்தா கல்லூரி 75.57 வீதம் தி/புனித மரியாள் கல்லூரி (தேசிய பாடசாலை ) 75.16 வீதம்
தி/ புனித சூசையப்பர் கல்லூரி (தேசியப் பாடசாலை) 65.63 வீதம் தி/மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி 65 வீதம் ஆகிய பெறுபேறுகளை மேற்படி முன்னணிப் பாடசாலைகள் பெற்றுள்ளன. வளர்ந்து வரும் பாடசாலையான சாஹிரா கல்லூரியானது அணைத்து பாடங்களிலும் சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளன. இஸ்லாம் 100 வீதம், தமிழ் மொழி 100 வீதம், ஆங்கிலம் 65 வீதம், கணிதம் 92 வீதம், வரலாறு 100 வீதம், விஞ்ஞானம் 97 வீதம், வர்த்தகமும் கணக்கீடும் 100 வீதம், சுகாதாரமும் உடற் கல்வியும் 100 வீதம், சிங்களம் 100 வீதம், புவியியல் 100 வீதம்,தமிழ் இலக்கிய நயம் 86.66 வீதம் குடியுரிமைக் கல்வி 100 வீதம் தகவல் தொழிநுட்பம் 100 வீதம் என அணைத்து பாடங்களிலும் சிறப்பான சித்தியை பெற்றுள்ளது. ஏ.ஆர்.அலானா 8A 1B, டி.எப் .ருசைதா 8A 1B, என்.எப்.நுஸ்கா 8A 1B,ஏ.அப்ரனா 8A 1C, எம்.கே.ரிப்னா 8A 1C, என்.சகானா 8A 1C, ஐ.குர்சித் 8A 1S, எம்,பா.பாத்திமா ஹனானியா 7A 2B ஆகிய மாணவர்கள் சிறப்பான சித்தியினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.கல்லூரியின் அதிபர் எஸ்.முகமட் அலி அவர்களின் அயராத முயற்சியே பாடசாலையை முதலிடத்திற்கு உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. க.பொ த உ/த ப் பரீட்சைகளிலும் தொடர் சாதனைகளை வென்று வரும் மேற்படி பாடசாலை பல வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும் கணக்காளர்களையும் பல சட்டத்தரணிகளையும் உருவாக்கி சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்றாக இப்பாடசாலையும் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
(கே.அஸீம் முஹம்மத் )