கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.