கடந்த 24 மணி நேரத்தில் 200 சாரதிகள் கைது

(FASTNEWS | COLOMBO) – போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று(15) காலை 6.00 மணி முதல் இன்று(16) காலை 6.00 மணிவரையிலான காலப்பகுதியில் குறித்த சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான விசேட தேடுதல் நடவடிக்கை கடந்த 05ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய இன்று(16) வரையான காலப்பகுதியில் 3354 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.