இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியானது தோல்வியினை தழுவியமையானது அணி சார்பில் விட்ட பெரிய தவறு என இலங்கை அணித்தலைவர் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்தியா இடையே நேற்று(20) நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோல்விக்கு பின்னர் பேசிய இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கா;
“.. தொடக்கத்தில் நாங்கள் நன்றாக விளையாடினாலும், பின்னர் அதை பயன்படுத்த தவறிவிட்டோம். துடுப்பாட்ட வீரர்கள் யாராவது ஒருவராவது பெரிய ஓட்டங்களை குவித்திருக்க வேண்டும்.
300 ஓட்டங்களை அணி குவிக்க வேண்டுமென்றால் ஆரம்பத்திலிருந்தே அடித்தளத்தை சிறப்பாக அமைக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இந்த விடயம் தான் எங்கள் அணிக்கு பிரச்சினையாக உள்ளது..” என கூறியுள்ளார்.
“.. ஒரு சமயம் 300 ஓட்டங்களை தொடுவது போல தெரிந்தாலும், எதிர்பாராதவிதமாக 216 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்களை இழந்து விட்டோம்.
இந்திய அணி கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடியது. இந்த போட்டியில் செய்த தவறிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும்..” என தரங்கா கூறியுள்ளார்.
(rizmira)