கடற்கரை ஓரங்களை கண்காணிக்க CCTV கமெராக்கள்…

கடற்கரையில் நடைபெறும் சமூக விரோத செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சீசீடிவி (CCTV) கமராக்களைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் – காரைநகர் ‘கெசூரினா’ கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிடம் மற்றும் குளியலறை ஆகியன இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

மேலும் மது பாவனை உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் குறித்த கடற்கரையை அண்மித்து இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் பாதுகாப்பிற்கென அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில் அவர்களால் 100% பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாமற் போவதாக தெரிய வந்துள்ளது.

குறித்த இந்த காரணங்களை அடிப்படையாகக் கொண்டு ‘கெசூரினா’ கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் சீசீடிவி (CCTV) கமராக்களைப் பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்