கடற்பகுதிகளில் கடும் மழை – காற்றின் வேகம் அதிகரிப்பு…

நாட்டின் சில பகுதிகளில் இன்று(26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் கிழக்கு மற்றும் ஈசன திசைகளில் உள்ள கடற்பிரதேசங்களில் காணப்படும் சீரற்ற காலநிலையால் குறித்த கடற்பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், அந்த பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.