கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் மீட்பு…

அம்பலாங்கொட கடற்பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன 11 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களின் படகு ஹிக்கடுவ பகுதிக்கு அருகில் கடல் சீற்றத்தினால் விபத்துக்குள்ளாகியது.

நேற்று குறித்த படகு கடற்றொழிலுக்காக சென்ற நிலையில், அதிகரித்த அலையின் தாக்கத்திற்கு உட்பட்டு காணாமல் போனதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

அவர்களை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.