வாத்துவ நகரில் கடற்படையின் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெலிசர கடற்படை முகாமுக்குச் சொந்தமாக குறித்த வாகனம் களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
42 வயதான ஒரு நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்படை வாகனத்தை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.