இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, இன்று புதன்(04) அழைக்கப்பட்டுள்ளார்.
ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அவ்வாணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோர், இவ்விடயம் தொடர்பில் ஏற்கெனவே வாக்குமூலம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.