கடற்படை முன்னாள் தளபதி வசந்த இன்றும் CID முன்னிலையில்..

கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரணாகொட இன்று(06) குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.

கரணாகொடவின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றிய லெப்டினன்ட் கொமாண்டர் சம்பத் முனசிங்க என்பவர் 11 பேரின் கடத்தலில் சம்பந்தப்பட்டிருந்த விடயம் தொடர்பில் கரணாகொட அறிந்திருந்ததாகவும், இது குறித்து வாக்குமூலம் அளிக்கவே இவருக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னறும் சீஐடியில் அட்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் ஒன்பது மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.