கடற்பரப்பின் காற்றின் வேகம் அதிகரிக்கும்

(FASTNEWS|COLOMBO) – சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.