வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவிய தாழமுக்க நிலை இலங்கைக்கு அப்பால் நகர்ந்து செல்கின்றது.
இதனால் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் ஏற்படக்கூடிய அழுத்தம் குறைவடைந்துவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(08) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து 950 கிலோமீற்றருக்கு அப்பால் தென்மேற்கு பகுதியில் இருப்பதுடன் எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் இதன் மூலமான அழுத்தம் குறைவடைந்து வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் வடக்கில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கட்டமைப்பின் மீதான காற்றின் வேகம் 80 முதல் 100 கிலோமீற்றர் கொண்டதாக இருப்பதுடன் இந்த கடற்பிரதேசம் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பிரதேசத்தில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் பொத்துவிலிருந்து காலி ஊடாக புத்தளம் வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான பிரதேசத்தில் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசத்தில் காற்று வடக்கிலிருந்து வடமேல் திசைநோக்கி வீசுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தை கொண்டதாக இருக்கும்.
கடற்றொழிலாளர்கள் கடல்நடவடிக்கையில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.