கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தொடை ஊடாக காலி வரை கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வரை வீச கூடும் எனவும், மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற் படையினருக்கும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.