திடீரென கடலின் சீற்றம் வழமைக்கு மாறாக அதிகரித்து கடல் அலைகள் மேலெழுந்து கரையினை ஒதுங்கியதனைத் தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச மக்கள் பதற்றமடடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் காரணமாக நேற்று(16) திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் திணைக்களமானது, திருகோணமலை அலுவலகத்தினால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மூதூர் பகுதியில் அதிகமான கடலலையின் வேகம் காரணமாக மண் சரிவுகளும், படகுகள் உடைந்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





