கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஏவுகணை சோதனை..

கடலுக்கு அடியில் நீர்மூழ்கிக்கப்பல் மூலம் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது.

வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை மற்றும் அணு சோதனையை நடத்தி வருகிறது. இதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தும் பொருளாதார தடை விதித்தும் வருகிறது.

இந்நிலையில் தென்கொரிய எல்லையில் சின்போ என்ற வடக்கு கடற்கரை பகுதியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாக வடகொரியா ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் இந்த சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. அப்போது போர்க்கப்பலில் இருந்த படி அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ஏவுகணை கடலில் இருந்து சீறி விண்ணி்ல் பாய்வது பைனாகுலர் வாயிலாக பார்வையிட்டார்.
வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை குறித்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இரு தினங்களில் அமெரிக்காவும்,தென்கொரியாவும் இணைந்து தென்கொரியாவின் தெற்கு கடல்பகுதியில் இரண்டு நாட்கள் வருடாந்திர ராணுவ போர் ஒத்திகை நடத்திட ஏற்பாடு செய்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த அட்டூழியத்திற்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.