கடவத்தை – மீரிகம வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம் ஆரம்பம்..

கடவத்தையிலிருந்து மீரிகம வரை பகுதியளவில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த நகரங்களுக்கு இடையிலான தூரம் 36Km ஆகும். குறித்த இந்த செயற்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 15 ஆயிரத்து 800 கோடி ரூபாவாகும்.

2020ஆம் ஆண்டளவில் இந்த செயற்திட்டத்தை பூர்த்தி செய்ய எதிர்ப்பார்ப்பதாக செயற்திட்டப் பணிப்பாளர் சரத்குமார தெரிவித்தார்.

குறித்த இந்த அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண வேலைகளின் போது, கம்பஹா, மீரிகம மற்றும் பெம்முல்ல பிரதேசங்களில் மூன்று கொங்கிறீட் பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)